By March 23, 20180 CommentsReport

தோல்வியிலிருந்து மீண்ட பூஜா..!!

தமிழில் முகமூடி திரைப்படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே 2016ஆம் ஆண்டு ரித்திக் ரோஷன் நடித்த மொகஞ்சதரோ படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. அந்தப் படத்தின் தோல்வியை ஒத்துக்கொள்வதாக பூஜா கூறியுள்ளார்.

அஷுதோஷ் கௌரிகர் இயக்கிய அந்தப் படத்தின் வழி திரைப்பட வணிகம் தொடர்பாக அவர் அனுபவம் பெற்றுள்ளார். இது குறித்து இந்துஸ்தான் டைம்ஸுக்கு அவர் அளித்த பேட்டியில், “படம் சரியாகப் போகவில்லை. இதில் முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், அனைத்தும் நம் கையில் இல்லை என்பதையே. உங்கள் கைகளில் உள்ளவற்றிலேயே உழைப்பைச் செலுத்த முடியும். மொகஞ்சதரோ படத்தில் நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. கடுமையான உழைப்பைக் கொடுத்தேன். இயக்குநர் அஷுதோஷிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என்னுடன் நடித்த ரித்திக் ரோஷனால் பாராட்டப்பட்டேன். அவரோடு இணைந்து நடிப்பது பெரிய விஷயம். எனவே கடின உழைப்பைத் தரத் தீர்மானித்தேன்” என்று கூறியுள்ளார்.

பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு ஆகிய தெலுங்கின் முன்னணி நடிகர்களின் படங்களில் பூஜா நடிக்கவுள்ளார். அவரது பாலிவுட் திட்டங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது, “மொகஞ்சதரோ படத்திற்குப் பின் சுவாரஸ்யமான கதைகள் அமையவில்லை. பிரபாஸுடன் நான் நடிக்கும் படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் உருவாகிறது. சில வாய்ப்புகள் வருகின்றன. இது சரியான தருணமாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*