By March 24, 20180 CommentsReport

ஜி.வி.-கவுதம் கார்த்திக் படங்களின் அப்டேட்..!!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘சர்வம் தாளமயம்’ படப்பிடிப்பையும், கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர். சந்திரமௌலி’ படப்பிடிப்பையும் துரிதமாக முடித்துள்ளனர் படக்குழுவினர்.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் சர்வம் தாளமயம் படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் மேகாலயாவில் நடந்துவந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டது என இயக்குநர் ராஜீவ் மேனன் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடிக்கிறார். இசைக்கும் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள படமென்பதால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். தயாரிப்பாளர்கள் சங்கம் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு 23ஆம் தேதியே கடைசி தேதி என அறிவித்திருந்ததால் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியுள்ளனர். ஸ்டிரைக் முடிந்ததும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

அதே போல, கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் மிஸ்டர்.சந்திரமௌலி படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள கிராபி தீவில் படமாக்கப்பட்டுவந்தது. அதுவும் நிறைவடைந்திருப்பதாக படத்தின் இயக்குநர் திரு தெரிவித்திருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் 23ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டுப் படப்பிடிப்புகள் ரத்து என்பதால் அதற்குள் படப்பிடிப்புகளை விறுவிறுப்பாக நடத்திமுடித்திருக்கின்றனர்.


Post a Comment