By March 24, 20180 CommentsReport

விளம்பரத் தூதரானார் இலியானா..!!

ஃபிஜி நாட்டு சுற்றுலாத் துறையின் விளம்பரத் தூதுவராக நடிகை இலியானா நியமிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை இலியானா தற்போது பாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில், தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஃபிஜி நாட்டின் விளம்பரத் தூதராக இவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஃபிஜி நாட்டில் வாழும் மக்களில் 40%க்கும் அதிகமானோர் இந்திய வம்சாவளியினர் என்பதால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என எல்லா இந்தியப் பண்டிகைகளும் அங்கு கொண்டாடப்பட்டுவருகின்றன. இந்த நாட்டுக்குக் கடந்த 2017இல் இலியானா விளம்பரத் தூதுவராக இருந்தபோது, இந்தியாவிலிருந்து ஃபிஜிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. இது கடந்த 2016ஐக் காட்டிலும் 30% அதிகம். இதனால் அவரை இந்த ஆண்டும் ஃபிஜியின் விளம்பரத் தூதுவராக நியமித்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் பையாஸ் சித்திக் கோயா தெரிவித்துள்ளார்.

300க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகள், அழகான கடற்கரைகள், திகிலூட்டும் விளையாட்டுக்கள், கலாச்சார சுற்றுலாத் தளங்கள் எனக் கண்களுக்கு விருந்து படைக்கும் அழகிய நாடாக ஃபிஜி உள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*