By March 25, 20180 CommentsReport

டைட்டிலை வெளியிட்ட பிரித்விராஜ்..!!

பிரித்விராஜ் நடித்து தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் பிரித்விராஜ், ’பிரித்விராஜ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் தொடர்ந்து படங்களைத் தயாரிக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். மேலும் தான் இயக்கும் முதல் படத்தை சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

மலையாளத் திரையுலகைப் பொறுத்தவரை சிறிய பட்ஜெட்டில் தரமான படங்கள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில் முதன்முறையாக சோனி போன்ற பெரிய நிறுவனங்கள் அங்கு கால்பதிக்கின்றன. இதனால் அங்கு பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரித்விராஜ் சோனி இணைந்திருக்கும் இந்தப் படத்திற்கு ‘9’ என பெயரிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும்போது படம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனுஸ் முகமது இயக்குகிறார்.

பிரித்விராஜ் நடிப்பில் ப்ளஸ்ஸி இயக்கும் ஆடுஜீவதம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 2008ஆம் ஆண்டு வெளியான கோட் டேய்ஸ் நாவலைத் தழுவி அப்படம் உருவாகவுள்ளது.


Post a Comment