By March 25, 20180 CommentsReport

தீபிகாவின் வித்தியாசமான கோரிக்கை..!!

பத்மாவத் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அணிந்த ஆடைகளைத் தன்னிடம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் நடிகை தீபிகா படுகோன்.

ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் படமாக வெளியானது பத்மாவத் திரைப்படம். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராணி பத்மினியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளையும் எதிர்ப்பையும் சந்தித்துத் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மூன்று நாட்களில் 56 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது.

அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த ஆடைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. தீபிகா அணிந்திருந்த லெகங்கா ஒவ்வொன்றும் 30 கிலோ எடையைக் கொண்டிருந்தது. அவற்றின் மதிப்பு 20 லட்சம் ரூபாயாகும். இந்த ஆடைகளைத் தினமும் 12 முதல் 14 மணிநேரம் வரை படப்பிடிப்பில் அணிந்த தீபிகா கூடுதலாக சில ஆபரணங்களையும் அணிந்து நடித்தார்.

தற்போது இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார் தீபிகா. “பத்மாவத் எனக்கு முக்கிய படம். அதில் நான் அணிந்திருந்த நகைகள், உடைகளில் பெண்களும் ரசிகர்களும் மனதைப் பறிகொடுத்தனர். நான் எங்கு போனாலும் அந்த உடைகள், நகைகள் பற்றியே பேசினார்கள். குறிப்பாக கிளைமாக்ஸில் தீயில் குதித்து இறக்கும்போது நான் அணிந்திருந்த உடைகளும் என் முகபாவனைகளும் அனைவரையும் கவர்ந்திருக்கின்றன. ரசிகர்களைப் போல் நானும் கிளைமாக்ஸில் அணிந்த அந்த ஆடைகளை விரும்புவதால் அவற்றை என்னுடனேயே நினைவுப்பொருளாக வைத்துக்கொள்ள நினைக்கிறேன். எனவே அந்த உடைகளை எனக்குத் தந்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.


Post a Comment