By March 25, 20180 CommentsReport

காலாவுக்கு வழிவிட்ட தயாரிப்பாளர்கள் சங்கம்..!!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1 முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்திருந்தது. அன்றிலிருந்து புதிய படங்கள் தணிக்கை செய்யப்படுவதற்கு விண்ணப்பிக்கத் தடையில்லாச் சான்று வழங்குவதையும் தயாரிப்பாளர்கள் சங்கம் நிறுத்திவைத்தது.

ஏப்ரல் 27 காலா ரீலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படத்தின் வேலைகள் முடிந்து தணிக்கைக்கு விண்ணப்பிக்கத் தடையில்லாச் சான்று கேட்டபோது எல்லோருக்கும் என்ன விதியோ அதுதான் காலாவுக்கும் என வழங்க மறுத்துவிட்டனர்..

பிலிம் சேம்பரில் வாங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது ஆனால் அவ்வாறு கொடுக்க கூடாது எனத் தயாரிப்பாளர்கள் சங்கம் இறுதிக் கட்டத்தில் தடுத்துவிட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையில் ரஜினிகாந்த் தன் தனித்தன்மையை முன்னிறுத்திக் காரியம் சாதிக்கும் முயற்சியில் இறங்கினார். தமிழ் சென்சார் முடிந்தால்தான் தெலுங்கு, இந்தி மொழிகளில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க முடியும். இதனைக் காரணமாகக் கூறி ரஜினிகாந்த் நேரடியாகப் பலரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா வியாபாரங்கள் முடியவில்லை. ஏப்ரல் 27 ரீலீஸ் என்றால் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் காலா சென்சார் முடிந்தாக வேண்டும்.

காலா படத்தை வாங்கிய லைக்கா நிறுவனம் ஏப்ரல் 27 ரிலீஸ் என வெளிநாடுகளில் உள்ள தியேட்டர்களை உறுதிப்படுத்தியுள்ளது.

கேரளா, ஆந்திராவில் முண்ணனி நடிகர்களின் படங்கள் காலாவுக்காக மாற்றப்பட்டுள்ளதால் அறிவிக்கப்பட்ட தேதியில் காலா வந்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் ரஜினி உள்ளார்.

இந்த நிலையில் தணிக்கை செய்வது கணினிமயமாக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர்களின் நலன் கருதி 8 படங்களுக்குத் தடையில்லாச் சான்று சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதில் காலாவும் அடக்கம்.

வேலை நிறுத்தம் முடிந்த பின் மார்ச் மாதம் வெளியிடத் தேதி அறிவிக்கப்பட்ட படங்கள் ரீலீஸ் ஆன பின்னரே ஏப்ரல் மாதப் படங்களை வெளியிட வேண்டும் என்ற விதியைக் கூறியே காலாவுக்கு வழிவிட்டிருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்.


Post a Comment

CAPTCHA
Refresh

*