By March 27, 20180 CommentsReport

இந்திப் படத்திலிருந்து விலகிய மாதவன்..!!

உடல்நலக்குறைவால் ரோகித் ஷெட்டி இயக்கும் புதிய இந்திப் படத்திலிருந்து விலகியுள்ளார் நடிகர் மாதவன்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தி சினிமாவுலகிலும் வலம்வரும் நடிகர் மாதவன். இவர் தமிழில் கடைசியாக ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ப்ரீத் வெப் சீரிஸில் நடித்துவருகிறார். த்ரில்லர் தொடரான இதில் டேனி மஸகார்னஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். ப்ரீத் தொடர் அமேசன் பிரைம் வீடியோவில் ஆன்லைன் ஸ்டீரிம் ஆக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜனவரி 26ஆம் தேதி முதல் வெளிவருகிறது.

இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்து ஹிட்டான ’டெம்பர்’ இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை ரோகித் ஷெட்டி இயக்குகிறார். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். மாதவனும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதையடுத்து கடந்த மாதம் மாதவனுக்கு தோள்பட்டை அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இந்தக் காயம் குணமாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே டெம்பர் ரீமேக்கில் நடிக்கவில்லை என்று மாதவன் தெரிவித்துள்ளார்.

“தோள்பட்டை அறுவைசிகிச்சை செய்துள்ளதால் அதில் இருந்து இப்போதுதான் மீண்டுவருகிறேன். அதனால் ரோகித் ஷெட்டி படத்தில் நடிக்க இயலவில்லை. நான் அவர் படங்களின் ரசிகன். இந்தப் படத்தில் நடிக்க முடியாமல்போனது வருத்தமளிக்கிறது” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் மாதவன் குறிப்பிட்டுள்ளார். இப்படம் குறித்து ரோகித் ஷெட்டி கூறும்போது, ‘இந்தப் படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இடம்பெறும். அதேபோல் ரசிகர்களும் முதன்முறையாக ரன்வீர் அதிகமாகச் சண்டையிடும் காட்சிகளைப் பார்ப்பார்கள். இது ரீமேக் படம்தான். ஆனாலும் முழுமையான ரீமேக்காக இருக்காது. இந்திக்குத் தகுந்த மாதிரி மாற்றியிருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*