By March 27, 20180 CommentsReport

அன்பான தென்னகமே: உருகும் மது..!!

தமிழில் தங்கள் திரையுலகப் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும் பாலிவுட் திசையை நோக்கிச் சென்ற நடிகர், நடிகைகள் வாய்ப்புகள் குறைந்த பின் மீண்டும் தெற்கு நோக்கித் திரும்புவது நடந்துவருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக இருப்பவர் மதுபாலா.

கே. பாலசந்தரின் அழகன் திரைப்படம் மூலம் திரையுலகில் நுழைந்த மதுபாலா தொடர்ந்து ரோஜா, ஜென்டில்மேன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் சில படங்கள் நடித்தார். ஆனால் தனது ஒட்டுமொத்த கவனத்தையும் பாலிவுட்டை நோக்கியே தக்கவைத்துக்கொண்டார்.

1997ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் இருவர் திரைப்படத்திற்குப் பின் அவர் தமிழில் படங்கள் நடிக்கவில்லை. 16 ஆண்டுகளுக்குப் பின்னேரே பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயைமூடி பேசவும் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்த பின் தென்னிந்திய மொழிகளில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். “ஒரு நடிகையாக எனக்கு தங்கள் கதவுகளைத் திறந்துவைத்திருக்கும் எனது சொந்த ஊரான சென்னை மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திராவுக்கு எனது நன்றி. மும்பையில் வளர்ந்ததால் பாலிவுட்டே எனது திறமையை வெளிக்காட்டுவதற்கான இடமாக நினைத்திருந்தேன். ஆனால் தென்னகம் அன்புடனும் தாராள மனதுடனும் உள்ளது” என்று கூறியுள்ளார்.


Post a Comment