By March 27, 20180 CommentsReport

நடிப்பிற்காக மருத்துவத்தை விட்ட சாய் பல்லவி நடிப்பிற்காக மருத்துவத்தை விட்ட சாய் பல்லவி..!!

மருத்துவத் தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்துப் பிரபலமானவர் சாய் பல்லவி. இந்தப் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. தற்போது விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் ‘கரு’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக என்.ஜி.கே படத்துக்கும், தனுஷ் ஜோடியாக மாரி இரண்டாம் பாகம் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஃபஸ்ட்போஸ்ட் இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் சிறுவயதிலேயே நடனம் கற்றுக்கொண்டேன். 2008இல் தாம்தூம் படத்தில் கங்கனா ரணாவத்தின் தோழியாக நடித்தேன். கஸ்தூரிமான் படத்திலும் மீரா ஜாஸ்மின் தோழியாக வந்தேன்.

அதன் பிறகு எனது தந்தை, ‘சினிமா நிரந்தர தொழில் இல்லை. கதாநாயகிகள் 6 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருக்க முடியும். அதன் பிறகு ஓரம்கட்டிவிடுவார்கள்’ என்றார். படிப்புதான் முக்கியம் என்று சொல்லி ஜார்ஜியாவுக்கு டாக்டருக்குப் படிக்க அனுப்பிவிட்டார். அங்கு படித்துக்கொண்டிருந்தபோதுதான் ‘பிரேமம்’ பட வாய்ப்பு வந்தது. படிப்புக்குப் பாதிப்பு வராமல் விடுமுறையில் மட்டும் நடிக்கும்படி பெற்றோர் தெரிவித்தனர். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மருத்துவரான சாய் பல்லவி அத்தொழிலைத் தொடர்ந்து செய்யாமல் இருந்ததற்கு சினிமாதான் காரணம் என்று சொல்கிறார். அது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “முழு நேர நடிகையாகிவிட்டதால் டாக்டர் வேலையை விட்டுவிட்டேன். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்யக் கூடாது. அதுவும் மருத்துவத் தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இதனால் எனது பெயருக்குப் பின்னால்கூட எம்.பி.பி.எஸ் பட்டத்தைச் சேர்த்துக்கொள்ளவில்லை. எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கிறது. கடவுள் அருள் இல்லாமல் இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது. எனக்குப் பிடித்த நடிகர் சூர்யா. அவருக்கு ஜோடியாக நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*