By March 30, 20180 CommentsReport

இயக்குநராகும் பிரித்விராஜ்..!!

பிரித்விராஜ் இந்த ஆண்டு இரண்டு முக்கியத் துறைகளில் அடியெடுத்துவைத்துள்ளார். ‘9’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள அவர் மோகன்லாலைக் கதாநாயகனாகக் கொண்டு உருவாகும் லூசிபர் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

படம் குறித்து மோகன்லால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “லூசிபர் நல்ல படமாக அமையும். சுவாரஸ்யமான கதையையும் வித்தியாசமான கதைசொல்லல் முறையையும் கொண்டுள்ளது. இது நல்ல பொழுதுபோக்குப் படமாக உருவாகி ஒவ்வொருவரையும் ரசிக்கவைக்கும் என நம்புகிறேன்” என அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்விராஜுடன் இணைந்து முரளி கோபி திரைக்கதை அமைக்கிறார். சில நாள்களுக்கு முன் இருவரும் மோகன்லாலை அவர் நடித்துவரும் ஒடியன் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து இறுதி திரைக்கதையை விவரித்துள்ளனர். “பல மாதங்களாக நானும் முரளியும் திரைக்கதையில் பணியாற்றி இப்போது இறுதி செய்துள்ளோம். இன்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது. படப்பிடிப்பு நாள்கள், நடிகர்கள் ஆகியவற்றை முடிவு செய்யவேண்டும்” என பிரித்விராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் அண்டனி பெரும்பாவூர் தயாரிக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*