By April 3, 20180 CommentsReport

மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட நடிகை ராதிகா ரெட்டி

தெலுங்கு டி.வி. நடிகை ராதிகா ரெட்டி. டெலிவிஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு 36 வயது ஆகிறது. ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராதிகா ரெட்டிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் 6 மாதத்துக்கு முன்பே ராதிகா ரெட்டி, கணவரை விவாகரத்து செய்து விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இவருக்கு 14 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்த சில நாட்களாக ராதிகா ரெட்டி மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இதனால் வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ராதிகா ரெட்டியின் கைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், “மன அழுத்தம் காரணமாக என்னை நானே கொலை செய்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது மூளையே எனக்கு எதிரி” என்று எழுதி வைத்து இருந்தார். ராதிகா ரெட்டி மரணம் தெலுங்கு நடிகர்-நடிகைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #RadhikaReddy


Post a Comment

CAPTCHA
Refresh

*