By April 7, 20180 CommentsReport

தயாரான மூடர் கூடம் 2..!!

மூடர் கூடம் படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது.

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் நவீன். 2013ஆம் ஆண்டு வெளியான மூடர்கூடம் படம் வசூல் ரீதியாக சாதனை படைக்காவிடினும் ரசிகர்களிடையேயும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிளாக் காமெடி ஜானரில் உருவாகியிருந்த மூடர் கூடம் இயல்பாக உருவான நகைச்சுவை தருணங்களாலும் வசனங்களாலும் ரசிகர்களைக் கவர்ந்தது. ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருட்டில் ஈடுபடும் ஒரு குழுவில் உள்ளவர்களைச் சுற்றி திரைக்கதை அமைந்திருக்கும். தற்போது இதே ஜானரில் கேங்ஸ்டர் குழுவில் உள்ளவர்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகிவருவதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறு ஒரு பின்புலத்தில் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த, பணியாற்றிய கலைஞர்கள் பெரும்பாலும் இதில் பணியாற்றியுள்ளனர். ஓவியா பங்கெடுத்துள்ளாரா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தபின் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*