By April 8, 20180 CommentsReport

கார்த்திக் சுப்பராஜ்: உள்குத்து ஏற்படுத்திய பின்விளைவுகள்..!!

அடேங்கப்பா… இப்படி ஒரு புளுகு புராணத்தில் கூட இல்லை சாமி எனக் கூறுகின்றனர் சினிமா துறையினர். ‘கபட நாடகம்’ நடத்துகிறாரே என கார்த்திக் சுப்புராஜைப் பார்த்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கொதித்துப் போய் உள்ளார்களாம்.

‘மெர்க்குரி’ படத்தை ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிடுவேன் என கார்த்திக் சுப்புராஜ் திடீரென அறிவித்தார். உடனடியாக அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தயாரிப்பாளர்கள் கண்டனக் குரல்களைப் பதிவு செய்தார்கள். அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு நாங்களும் ஆதரவளிக்கிறோம். அதுவரை தமிழ்நாட்டில் ‘மெர்க்குரி’ படத்தை வெளியிடவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். அவருடைய டிவிட்டர் பதிவில் ‘ஸ்டிரைக் முடியும் வரை எங்கள் படத்தின் தமிழ்ப் பதிப்பை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம்’ எனக் கூறியிருந்ததன் உள் அர்த்தம் அப்போது பலருக்கும் புரிந்திருக்க நியாயமில்லை.

அதாவது, ‘மெர்க்குரி’ படத்தை தமிழில் வெளியிட மாட்டார். ஆனால், ஹிந்தியில் வெளியிடுவேன் என அறிவித்திருக்கிறார். ‘மெர்க்குரி’ படம் ஒரு மௌனப் படம். படத்தில் இடம்பெற்றுள்ள எந்தக் கதாபாத்திரமும் பேசவே பேசாது. அப்படியிருக்கும் போது இந்தப் படத்தை எப்படி அவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிப்படம் எனப் பிரித்துச் சொல்கிறார் எனப் புரியாமல் தான் இந்தப் புளுகு புராணத்தில் கூட இல்லை எனக் கூறுகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜின் இந்த உள்குத்தை அறிந்த தயாரிப்பாளர்கள் அவரை மீண்டும் வறுத்து எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். கார்த்திக் சுப்புராஜை இப்படி பின்னாலிருந்து இயக்குவது தமிழ்த் திரையுலகின் ஒரு முக்கிய நட்சத்திரக் குடும்பம் என்பது அவர்களது சந்தேகம். வேலை நிறுத்தத்தை கார்த்திக் சுப்புராாஜ் மூலம் முறியடித்து விட்டால் “காலா”ர நடக்கும்போது கெட்ட பெயர் நமக்கு வராது என திட்டமிட்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியாது. காரணம், அடுத்து அவர் இயக்கப்போவது ரஜினிகாந்த் படம்.

ரஜினிகாந்த் உடன் இணைக்கப்படும் எந்த செய்தியும் அகில இந்திய கவனம்பெறும். பிற மாநிலங்களில் மெர்க்குரி படத்தை விளம்பரப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சுப்புராஜ் ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவதற்கு தகுதியானவர்தான்.


Post a Comment