By April 10, 20180 CommentsReport

வெற்றியைக் கொண்டாடாத இயக்குநர்..!!

பத்மாவத் திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்திருந்தாலும் வசூல் சாதனை படைத்துவருகிறது. ஆனால் அது குறித்து அக்கறை செலுத்த விரும்பவில்லை என இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.

பத்மாவத் திரைப்படம் உருவாகும்போதே அதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. படப்பிடிப்பு அரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன. படக்குழுவினருக்கு கொலைமிரட்டலும் விடுக்கப்பட்டது. தடையை மீறி பத்மாவத் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாயைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இது குறித்து இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி கருத்து தெரிவித்துள்ளார். “இந்த வெற்றிக்குப் பின் அதிகளவிலான வலி உள்ளது. படத்தை வெளியிட முடியாது என்று நினைத்தோம். ஆனால் கடவுள் எங்களோடு இருந்தார். இதனால் ஒவ்வொரு தடையையும் கடந்தோம்” என்று பீபிங்மூன் இணைய இதழில் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நமது படம் எப்படி வர வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல் பாக்ஸ் ஆபிஸையே பார்த்துக்கொண்டிருக்கிறோம். நான் பாக்ஸ் ஆபிஸ் பற்றி நினைத்திருந்தால் பத்மாவத்தை உருவாக்கியிருக்க முடியாது. படத்தின் வெற்றிக்கான சூத்திரங்கள் என்று கூறப்படுவதெல்லாம் ஒன்றுமே இல்லை. வில்லன் கதாபாத்திரத்தில் வெற்றிகரமான இளம் நட்சத்திரத்தை நடிக்கவைத்தேன். நான் பாக்ஸ் ஆபிஸில் கவனம் செலுத்தியிருந்தால் காமோஷி: தி மியூசிக்கல் அல்லது சவாரியா போன்ற படங்களை இயக்கியிருக்க முடியாது. அந்த இரண்டு படங்களையும் மீண்டும் இயக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*