By April 10, 20180 CommentsReport

தமிழில் வெளியாகும் பூர்ணா படம்..!!

Actress Poorna Latest Cute Hot Spicy Photos Gallery at Rajugari Gadi Release Press Meet

தெலுங்கில் நடிகை பூர்ணா நடித்த திகில் படமான ராட்சசி, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற பல படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பூர்ணா நடித்து தெலுங்கில் வெளியான பேய் படமான ‘ராட்சசி’ தமிழில் ‘குந்தி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை செய்த இந்தப் படத்தை, பல தெலுங்குப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்துவரும் வசனகர்த்தா ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்.

இது குறித்துக் கூறிய அவர், “‘ராட்சசி’ என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படத்தை ‘குந்தி’ என்ற பெயரில் தமிழில் உருவாக்கி வருகிறோம். பூர்ணாவுடன் அபினவ், கிஷோர், அபிமன்யூ சிங், பேபி தன்வி, பேபி கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பண்ணா ராயல் இயக்கியுள்ள இதனை மோ.கோ.உலகேசுகுமார் தயாரித்திருக்கிறார்.

கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்க்கையில், ஓர் அதிர்ச்சிகரமான சம்பவம் நடக்கிறது. ஒரு பேய், பூர்ணாவின் 2 குழந்தைகளையும் கொல்லத் துடிக்கிறது. பேயிடமிருந்து பூர்ணா குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை” என்று விவரித்துள்ளார்.

கிராபிக்ஸ் காட்சிகள் 30 நிமிடங்கள் இந்தப் படத்தில் இடம்பெறுவதாகக் கூறிய அவர், “சந்திரமுகி, முனி, காஞ்சனா, அருந்ததி ஆகிய பேய் படங்களின் வரிசையில் இதுவும் இடம்பெறும். தமிழ் சினிமாவின் அடுத்த திகிலான பேய்ப் படம் இதுதான்” எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post a Comment