By April 10, 20180 CommentsReport

தனுஷ் படத்தில் ‘ஜேம்ஸ் பாண்ட்’?..!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துவரும் பியர்ஸ் ப்ராஸ்னனை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கவுள்ள படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுவருகிறார். கடந்த ஆண்டு தனுஷை கதாநாயகனாகக் கொண்டு புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. அந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் அல் பசீனோ, ராபர்ட் டி நீரோ ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டது. ஆனால் அந்த நிறுவனம் விஜய்யின் மெர்சல் படத்தில் கவனம் செலுத்தியதால் இப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெறவில்லை. கேங்க்ஸ்டர் கதையான இதில் அமெரிக்காவின் தெருக்களில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு லண்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கவுள்ளது. மேலும் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துவரும் பியர்ஸ் ப்ராஸ்னனை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்திற்குப் பின் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.


Post a Comment