By April 10, 20180 CommentsReport

காஜலுக்கு சிறந்த நடிகை விருது..!!

இந்தி சினிமாவுலகில் சில படங்கள் நடித்திருந்தாலும், தென்னிந்திய சினிமாவுலகில் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருக்கும் நடிகை காஜல் அகர்வாலுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

2008ஆம் ஆண்டு பேரரசு இயக்கிய பழனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தமிழ்த் திரையுலகில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள காஜல் தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிகளவிலான ரசிகர்களைக் கொண்டவர். தமிழ், தெலுங்கு சினிமாவுலகின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜீ அப்சரா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது காஜலுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஜல் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வருடத்துக்கான சிறந்த நடிகைக்கான விருதுக்கு ஜீ அப்சரா விருது விழாவில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு ஒரு மகிழ்ச்சியான தருணம். என் அன்பான ரசிகர்களே உங்களுக்குத் தான் நான் நன்றியை தெரிவிக்க வேண்டும். உங்களின் பேராதரவுதான் எனக்கு இந்த விருதைப் பெற்று தந்திருக்கிறது. என் அன்பான ரசிகர்களுக்கு நன்றி” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment