By April 10, 20180 CommentsReport

தனுஷ் படத்துக்குத் தயாரிப்பாளர் மாற்றம்..!!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்துக்கான தயாரிப்பு நிறுவனத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

‘இறைவி’ படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டார் தனுஷ். இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், தனுஷ் தொடர்ச்சியாகப் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்துவந்ததால், கார்த்திக் சுப்பராஜுக்கு கால்ஷீட் கொடுப்பதில் சிக்கல் நீடித்தது. எனவே, பிரபு தேவாவை வைத்து ‘மெர்குரி’ படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்பராஜ்.

இதையடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்பராஜுக்குக் கிடைத்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

ரஜினி படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் படத்தின் தயாரிப்பு பணியிலிருந்து விலகியிருக்கிறது அந்த நிறுவனம். பண நெருக்கடியால் தயாரிப்பிலிருந்து விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த் தன்னுடைய ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு முழுக்க லண்டனில் நடைபெறவிருக்கிறது.

தனுஷ் இரண்டாவதாக இயக்கவுள்ள படத்தையும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment