By April 11, 20180 CommentsReport

தெலுங்கில் பிஸியான தமன்னா..!!

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதியுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் நடிகை தமன்னா.

நடிகை தமன்னா, ஸ்கெட்ச் படத்திற்குப் பிறகு தமிழில் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நா நுவ்வி, குயின் ரீமேக் மற்றும் இயக்குநர் குனால் கோலி இயக்கத்தில் பெயரிடப்படாத படம் என தொடர்ச்சியாக ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். மேலும் இவருடைய நடிப்பில் இந்தியில் ‘காமோஷி’ மற்றும் மராத்தியில் ‘ஏபிசி’ போன்ற படங்களும் உருவாகிவருகின்றன.

இந்நிலையில் தமன்னா, தெலுங்கில் பிரபல முன்னணி நடிகரான வெங்கடேஷ் டகுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான வெங்கடேஷ் தற்போது வரை 71 படங்களில் நடித்துள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் தெலுங்கில் மூன்று படங்கள் உருவாகிவருகின்றன. 57 வயதான இவர் முதன் முறையாக தமன்னாவுடன் தன்னுடைய 73ஆவது படத்தில் ஜோடி சேர உள்ளார். ‘எப் 2-பண் அண்ட் ப்ரஸ்ட்ரேஷன் என்று பெயரிட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்க உள்ளார். மற்றொரு நாயகனாக வருண் தேஜ் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் நாயகியாக நடித்த மெஹரீன் நடிக்கிறார்.

இவர் முன்னதாக இயக்குநர் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான ராஜா தி கிரேட் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக அனில் ரவிப்புடி இயக்கும் இப்படத்தில் இணைந்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது.


Post a Comment