By April 11, 20180 CommentsReport

பிரபாஸுக்குத் திருமணமா?: மறுக்கும் சிரஞ்சீவி..!!

தெலுங்கு நடிகர் பிரபாஸ், நடிகை நிஹாரிகாவை மணம் முடிக்கவுள்ளதாக வலம்வரும் தகவலை நிஹாரிகாவின் உறவினரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமான சிரஞ்சீவி மறுத்துள்ளார்.

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்ததில் இருந்து தெலுங்குத் திரையுலகில் பிரபாஸின் திருமணம் குறித்த வதந்திகள் பரவிவருகின்றன. பாகுபலியில் இணைந்து நடித்த அனுஷ்காவைத் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதை இருவரும் மறுத்த நிலையில், இப்படியான தகவல்கள் உலாவருவது குறைந்தது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நிஹாரிகாவைத் திருமணம் செய்யவுள்ளதாக இப்போது தகவல்கள் பரவிவருகின்றன.

2016ஆம் ஆண்டு ஒக்க மனசு படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிஹாரிகா வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள ‘ஹேப்பி வெடிங்’ படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். நடிகரும் தயாரிப்பாளருமான நாகேந்திர பாபுவின் மகளும் சிரஞ்சீவியின் மருமகளுமான நிஹாரிகாவைக் குறித்து வெளிவந்துள்ள இத்தகவலை சிரஞ்சீவி மறுத்துள்ளதோடு நிஹாரிகா தனது கவனத்தை தற்போது நடிப்பில் மட்டும் வைத்துள்ளதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பிரபாஸ் தற்போது சோலோ படத்தில் நடித்துவருகிறார். ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படம் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிவருகிறது. சுஜித் இயக்குகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*