By April 11, 20180 CommentsReport

ரஜினிக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்..!!

ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ் சினிமா உலகமே ஸ்தம்பித்துள்ளது. திரைத்துறை சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தனது மெர்குரி படத்தை வெளியிட இருப்பதாக தெரிவித்தார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், திரையுலகினர் ஒருமனதாக எதிர்ப்புக் குரல் தந்ததால் மெர்குரி தமிழில் வெளியாகாது எனத் தெரிவித்தார்.

மெர்குரிக்குப் பிறகு ரஜினியைக் கதாநாயகனாக வைத்து இயக்கும் வாய்ப்பு கார்த்திக் சுப்புராஜுக்கு அமைந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ரஜினியின் 2.0 படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்திலும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நவாசுதீன் சித்திக் வில்லனாக நடிக்க சம்மதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இது சம்பந்தமாகச் சில நாள்களுக்கு முன்பு மும்பை சென்ற கார்த்திக் சுப்புராஜ், நவாசுதீனைச் சந்தித்துக் கதையை விளக்கியிருக்கிறார். அவருக்குக் கதை மிகவும் பிடித்துவிட நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.

தனது கதாபாத்திரம் தனித்த கவனத்தைப் பெற வேண்டுமென, எண்ணிக்கையில் குறைவாக நடித்தாலும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நவாசுதீன், ‘தலாஷ்’ படத்துக்காகச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*