By April 11, 20180 CommentsReport

துணிச்சலான வேடத்தில் ஸ்ரீனிகா..!!

‘எ ஸ்டோரி’ என்ற புதிய வெப் சீரிஸில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் நடிகை ஸ்ரீனிகா.

சினிமா, சீரியல் இவற்றைத் தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் ‘மல்லி’ குறும்படத்திற்காக மாநில மற்றும் தேசிய விருதுளைப் பெற்ற இயக்குநர் நிமேஷ் இயக்கத்தில் எ ஸ்டோரி (A Story) என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடரில் நாயகியாக ஸ்ரீனிகா நடித்துள்ளார். இதில் அவர் பாலியல் தொழிலாளியாக துணிச்சலான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். ‘அப்பு மூவிஸ்’ பாபு தூயவன் இந்த வெப் சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த வெப் சீரிஸிற்கு ஹரி இசையமைத்துள்ளார். ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்துள்ளார். திலக் கலை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.

‘பெண் என்பவள் கடவுள் வரைந்ததிலேயே அழகான ஓவியம்’, ‘செக்ஸ் என்பது கலை’ மற்றும் ‘தைரியமான சொல்லப்படாத கதை’ என அடுத்தடுத்து இதன் மூன்று போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ள நிலையில், நேற்று வெளியான ட்ரெய்லரும் மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து இயக்குநர் நிமேஷ் கூறும்போது, ”எ ஸ்டோரி வெப் தொடரின் ட்ரெய்லர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கதை பாலியல் தொழிலாளியின் பார்வையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவருடைய தைரியம், கோபம், புத்திசாலித்தனம், சமூகத்தை எதிர்கொள்ளும் விதம் என எல்லாமே சொல்லப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார்.

‘எ ஸ்டோரி’ (A Story) வெப் சீரிஸ் 10 நிமிடக் கதையென 20 வாரங்கள் விரைவில் யூ ட்யூபில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment