By April 13, 20180 CommentsReport

காளி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்..!!

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கி உள்ள “காளி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பிக்சர் பாக்ஸ் நிறுவன உரிமையாளர் அலெக்சாண்டர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து அவரது மனைவி பாத்திமா தயாரிப்பில் வெளிவர உள்ள “காளி’ திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் விஜய் ஆண்டனி நடித்து அவரது மனைவி தயாரித்த அண்ணாதுரை படத்தை வெளியிட்டதால் தனக்கு ஏற்பட்ட ரூ. 4 கோடியே 73 லட்சத்தை கொடுக்காமல் காளி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், “காளி’ திரைப்படத்தை வெளியிட தடை விதித்து, ஏப்ரல் 11 (புதன்கிழமை) ஆம் தேதிக்குள் ரூ. 4 கோடியே 73 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்தினால் தடை நீக்கப்படும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் கடன் தொகையை செலுத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “காளி’ திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி, பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையில் ரூ.2 கோடிக்கான உத்தரவாதத்தைச் செலுத்த உத்தரவிட்டனர்.


Post a Comment

CAPTCHA
Refresh

*