By April 12, 20180 CommentsReport

ஜப்பானில் ‘பாகுபலி 2’ சாதனை..!!

பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் உருவான ‘பாகுபலி 2’ திரைப்படம் இந்தியா மட்டுமல்லாமல் ஜப்பானிலும் சாதனை படைத்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாகுபலி2’. இந்தப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகம் வெளியானது. அதில் பிரபாஸ், ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் 2017ஆம் ஆண்டு உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்திய திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிவருகின்றன. அந்த வகையில் பாகுபலி 2 திரைப்படம் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் டோக்கியோவில் வெளியாகியது. அதே போல் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரஷ்யாவிலும் வெளியானது.

இந்நிலையில் டிசம்பர் 29ஆம் தேதி திரையிடப்பட்ட ‘பாகுபலி2’ ஜப்பானில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. 15 வார வசூலாக அமெரிக்க டாலர் மதிப்பில் 1.3 மில்லியனை ஈட்டியுள்ளது. இதனை ‘பாகுபலி 2’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சோபு யார்லகட்டா உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இந்த வெற்றியினால் படக்குழு உற்சாகமாகியுள்ளது.


Post a Comment