By April 12, 20180 CommentsReport

ட்விட்டரில் மோதிக்கொண்ட இயக்குநர்கள்..!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று முன் தினம் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சோறா, ஸ்கோரா என முன்னெடுக்கப்பட்ட முழக்கம் சமூக வலைதளங்களில் ஆதரவைப் பெற்றது. சிலர் ஐபிஎல்லுக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம், விளையாட்டில் அரசியலைக் கலக்காதீர்கள் என்ற வகையிலும் பதிவிட்டு வந்தனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு தனது ‘சரோஜா’ படத்தில் ஐபிஎல் போட்டி பார்க்கச் செல்வதைக் காட்சியாக வைத்திருப்பார். தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டம் குறித்து, “நான் ஒண்ணும் சொல்லலப்பா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் போராட்டம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “நேற்று (ஏப்ரல் 10) நடந்த போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது. அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவன் விவசாயி! வன்முறையையும்!” என்று கூறியுள்ளார்.

அதோடு இயக்குநர் வெங்கட் பிரபுவையும் டேக் செய்து, “வெங்கட் பிரபு சார் நல்லா சிஎஸ்கே ரசிங்க. அது உங்கள் உரிமை. விவசாயிகளை காமெடி பண்ணாதீங்க ப்ளீஸ்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு அந்தப் பதிவில் பதிலளித்துள்ள வெங்கட் பிரபு, “சார், சத்தியமா நான் நம்ம விவசாயிகளை காமெடி பண்ணவில்லை. அந்த மாதிரி கேவலமான எண்ணம் எனக்குக் கிடையாது. நான் சொல்வது யாருக்கு என்பது உங்களுக்குப் புரியவில்லை என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இதற்கு பாண்டிராஜ், “ஓகே சார், விவசாயம் பண்ண முடியாமல் ஓடி வந்தவர்களில் நானும் ஒருவன். அந்த வலி. சக சகோதரனும் இப்படியா என்று நினைத்தேன். சினிமா எப்படி என்டர்டெய்ன்மென்ட் மீடியாவோ, அதே மாதிரி ஸ்போர்ட்ஸும். அத நம்ம பார்க்கக் கூடாது என்று சொல்ல முடியாது. அது எனக்கும் புரிகிறது. நாடகமும் புரிகிறது. அப்படி இல்லைன்னா சாரி” என்று குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*