By April 13, 20180 CommentsReport

இயக்குநர் போட்ட கட்டளை..!!

ஆஸ்கர் விருது வென்று சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் மஜித் மஜிதி மும்பையைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கியிருக்கும் படம் ‘பியாண்ட் தி க்ளவுட்ஸ்’. மலையாள நடிகை மாளவிகா மோகனன் இந்தப் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகர் இஷான் கட்டார் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அமீர் என்ற கதாபாத்திரத்தில் தாராவி பகுதியில் சுற்றித்திரியும் இளைஞனாக நடித்திருக்கிறார் இஷான் கட்டார். பிரபலமானவராக இருந்தாலும், இந்தப் படத்தில் தாராவி பகுதியை சேர்ந்த பையனாக நடிக்கவேண்டியதிருந்ததால், இஷான் கட்டாருக்கு இயக்குநர் மஜித் மஜிதி ஒரு கட்டளைவிடுத்திருந்தார்.

இப்படத்திற்காக தாராவி பகுதியில் வசிக்கும் இளைஞர் ஆகாஷ் என்பவரை இயக்குநர் மஜித் மஜிதி தேர்ந்தெடுத்து இஷானுக்கு நண்பராக நடிக்கவைத்திருக்கிறார். அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் படத்திலும் தோன்றியிருக்கிறார்கள். ஆகாஷும், இஷானும் நெருங்கிய நண்பர்களாகப் படத்தில் வருவதால், இயக்குநரின் கட்டளைப்படி இருவருமே படப்பிடிப்பு தளத்திற்குப் பின்னாலும் ஒன்றாகவே இருந்துள்ளனர்.

அதோடு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, உண்மையாகவே அப்பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனாக நடித்துள்ளார் இஷான் கட்டார்.

ஜீ ஸ்டுடியோ மற்றும் நாமா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் பியாண்ட் தி க்ளவுட்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியாகிறது.


Post a Comment