By April 13, 20180 CommentsReport

சமந்தாவுக்கு ஐடியா கொடுத்த சைதன்யா..!!

திருமணத்துக்குப் பிறகு பரிமாறிக்கொள்ளும் அன்பின் அளவிலேயே அந்த ஜோடிக்கு இடையேயான காதல் வளரும் என்பதை நடிகை சமந்தா நிரூபித்திருக்கிறார்.

திருமண வாழ்க்கையைப் பற்றி மூடி மறைத்து என்ன கிடைக்கப்போகிறது என்று கூறிய சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவின் அன்பு தனக்கு எந்தளவுக்கு உதவுகிறது என்பது பற்றி விளக்கமாகக் கூறினார். “நான் பொதுவாகவே என் படங்கள் ரிலீஸின்போது மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாவேன். படம் வெற்றி பெறுமா, தோல்வியடையுமா என்பதை யோசித்தே, இரவு முழுவதையும் தூக்கமின்றி செலவழிப்பேன். இதைக்கண்ட சைதன்யா எனக்கான அறிவுரைகளைக் கூறி தெளிவுபடுத்தினார்” என்று ஃபிலிம் கம்பேனியன் நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.

“நமது நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துவிட்டால் ரசிகர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம். கடின உழைப்பைப் பாராட்டுவதில் ரசிகர்கள் பாரபட்சம் பார்க்கவே மாட்டார்கள்” என்று நாக சைதன்யா, சமந்தாவின் கவலையைப் போக்குவதற்கு அறிவுரை கொடுத்ததாகக் கூறியிருக்கிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*