By April 13, 20180 CommentsReport

பிரனவ்வுடன் கூட்டணி: விளக்கமளித்த கல்யாணி..!!

இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி, மோகன்லால் மகன் பிரனவ் உடன் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளிவரும் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தந்தையைப் போலவே இயக்குநராகும் ஆசையில் திரைத் துறைக்குள் நுழைந்த கல்யாணி விக்ரம், நயன்தாரா இணைந்து நடித்த இருமுகன் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஆனால், அதன்பின் இயக்குநராகும் கனவைத் தள்ளிவைத்துவிட்டு கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் அகில் அகினேனி நடித்த ஹலோ படத்தின் மூலம் கல்யாணி திரைத் துறையில் கதாநாயகியாக அறிமுகமானார். விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. தற்போது ஷர்வானந்த் நடிக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

மோகன்லாலின் மகனான பிரனவ்வும் எட்டு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். இவர் ஜனவரி மாதம் வெளியான ஆதி படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பாபநாசம் படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப் அந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் கல்யாணி, பிரனவ் இணைந்து நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வலம்வருகின்றன. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கல்யாணி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த வதந்தி எங்கிருந்து வருகிறது? நான் இது உண்மையாக வேண்டும் என விரும்புகிறேன். அது நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*