By April 13, 20180 CommentsReport

பிரவுனி: பிரியங்காவின் பெயர் காரணம்?..!!

சினிமாவில் நிற வேற்றுமையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம்வருபவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டைத் தொடர்ந்து ஹாலிவுட் சென்றுள்ள பிரியங்கா திரைத் துறையில் முக்கியமான ஆளுமையாக மாறியுள்ளார். சமீபத்தில் ‘இன் ஸ்டைல்’ பத்திரிகைக்கு அவர் பேட்டி அளித்த போது அவரிடம் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையில் இருக்கும் சம்பள ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள பிரியங்கா, “இந்தச் சம்பள ஏற்றத் தாழ்வு இந்தியா, அமெரிக்காவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் இருக்கிறது. அதுவும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும்போது தரப்படும் சம்பள இடைவெளி அதிர்ச்சி தரும்” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து சினிமாவில் நிற வேற்றுமை இருப்பதை உறுதி செய்துள்ள அவர், “கடந்த வருடம், ஸ்டுடியோ நிர்வாகி ஒருவர் எனது ஏஜென்டைத் தொடர்புகொண்டு, எனது ‘ஃபிசிக்’ சரியில்லை எனக் கூறினார். ஃபிசிக் சரியில்லை என்றால், எதைக் குறிப்பிடுகிறீர்கள்; நான் இன்னும் இளைக்கவேண்டுமா, ஷேப் கொண்டுவர வேண்டுமா அல்லது சதை போட வேண்டுமா என ஒரு நடிகையாக எனது சந்தேகத்தைக் கேட்டேன். அதற்கு அந்த ஸ்டுடியோ நிர்வாகத்தினர், எனது நிறத்தைக் குறை சொல்லும் விதமாக மாநிறம் அல்லாத ஒருவர்தான் வேண்டும் என பதிலளித்தனர். அதனால் அந்தப் பட வாய்ப்பு பறிபோனது” என்று விளக்கினார்.

“குவாண்டிகோ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நான் நடித்தாலும் அங்கேயும் நான் நிற வேற்றுமையால் பாதிக்கப்பட்டேன். நியூயார்க்கில் உள்ள பள்ளியில் படிக்கும்போது என் நிறத்தில் ஒருவரைக் கூட அங்கு பார்க்க முடியவில்லை. என்னை பிரவுனி(மாநிறம்) என்றே அழைப்பார்கள். என்னிடம் உன் நாட்டுக்குப் போ என்று கூறுவார்கள்” என்று நிறவேற்றுமையால் பாதிக்கப்பட்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*