By April 13, 20180 CommentsReport

பூஜாவுக்குப் போட்டியாகும் ஷாலினி..!!

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் 25ஆவது படத்தில் ஷாலினி பாண்டே நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்த ஸ்பைடர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். தற்போது இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கிறார். இது அவரின் 25ஆவது படமாகும். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாலினி பாண்டே நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாநதி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வரும் ஷாலினி 100 % லவ் படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகவும், ஜீவாவுடன் ‘கொரில்லா’ உள்ளிட்ட பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மகேஷ் பாபுவின் 25 வது படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக முன்பு செய்தி வெளியானது. இதையடுத்து பூஜா ஹெக்டே, மகேஷ் பாபுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் மற்றொரு கதாநாயாகியாக ஷாலினி பாண்டே நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*