By April 13, 20180 CommentsReport

விஜய் சேதுபதி இயக்குநருடன் ஹரிஷ் கல்யாண்?..!!

பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஷ் கல்யாண். அதே போட்டியில் பங்கேற்ற சக போட்டியாளரான ரைஸாவுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இளன் இயக்கிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதோடு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.ஆர்.எஸ்.பிலிம்ஸ் மூலம் தயாரித்துவருகிறார். ரொமான்டிக் காமெடி வகையில் உருவாகிவரும் இதற்கு மணிக்குமரன் சங்கரா படத்தொகுப்பாளராகவும், ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிகின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், விஜய்சேதுபதி நடிப்பில் ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் அனைத்தும் முடிவடைந்தது என்றும், இதன் படப்பிடிப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம் முடிவடைந்ததும் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment