By April 13, 20180 CommentsReport

சிபிக்கு திருப்புமுனை ஏற்படுத்துமா புதிய படம்?..!!

மதுபானக்கடை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கமலக்கண்ணன் தற்போது சிபிராஜை கதாநாயகனாகக் கொண்டு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

சிபிராஜ் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘சத்யா’. வித்தியாசமான கதைக்களம் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது ‘ரங்கா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது சிபிராஜின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவர் அடுத்ததாக ‘மதுபானக்கடை’ பட இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘மதுபானக்கடை’ திரைப்படம் அரசியலை நையாண்டி செய்யும் விதமாக உருவாகி 2012 ஆம் ஆண்டு வெளியானது. ரபீக், ஐஸ்வர்யா, என்.டி.ராஜ்குமார், ‘பூ’ ராமு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வேத் சங்கர் இசையமைத்திருந்தார்.

ஆறு வருடங்கள் கழித்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க இருக்கிறார் கமலக்கண்ணன். இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

சிபிராஜ் தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானாலும் வலுவான வெற்றியை பதிவுசெய்யமுடியாமல் உள்ளார். அதேபோல் அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களையும் தேர்வு செய்வதில் தவறுகிறார். இந்நிலையில் கமலக்கண்ணனுடன் இணைந்துள்ள இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.


Post a Comment