By April 14, 20180 CommentsReport

தெலுங்கில் ரீமேக்காகும் அதர்வா படம்..!!

அதர்வா நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான ‘கணிதன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிகில் சித்தார்த்தா நடித்துவருகிறார்.

போலி சான்றிதழ் மோசடியைக் கதைக் களமாகக்கொண்ட இந்தப் படத்தில் பத்திரிகையாளராக அதர்வா நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் சந்தோஷ் இயக்கியிருந்தார். இதில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்தப் படம் தெலுங்கில் ‘முத்ரா’ என்ற பெயரில் தயாராகிவருகிறது. மூலப்படத்தை இயக்கிய சந்தோஷே தெலுங்கில் இயக்குகிறார். படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த நிகில், “உங்களைப் போன்றே நானும் இதில் பத்திரிக்கையாளராக நடிக்கிறேன். உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு தயாராகிறது. பல மூத்த பத்திரிகையாளர்களைச் சந்தித்து பத்திரிகைப் பணியில் உள்ள சவால்களைக் கேட்டறிந்தேன்” என்று கூறியுள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்னரே படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. தற்போது நிகில் நடிக்கும் முக்கிய காட்சிகளை ஹைதராபாத்தில் படம்பிடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு திரையுலகில் பரிச்சயமான நடிகைகளில் ஒருவரைக் கதாநாயகியாக நடிக்க வைக்கப் படக்குழு முயற்சி செய்துவருகிறது.


Post a Comment