By April 14, 20180 CommentsReport

மெகா கூட்டணியில் மற்றொரு நட்சத்திரம்..!!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியுடன் களமிறங்கவுள்ளது ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ படக்குழு. நாளுக்கு நாள் இதில் நடிப்பவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தற்போது இதில் இணைந்துள்ளவர் நடிகை தமன்னா.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு உருவாகிவரும் படம் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’. அவரது கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இது சிரஞ்சீவியின் 151ஆவது படம். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தன்னுடைய கோனிடேலா புரொடக்ஷன்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்க, அமிதாப் பச்சன், ஜெகபதி பாபு, விஜய் சேதுபதி, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாகிவரும் இந்தப் படம், 150 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நட்சத்திரங்கள் மெகா கூட்டணி அமைத்திருப்பதால் இந்தப் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Post a Comment