By April 17, 20180 CommentsReport

மாதவனை வரவேற்கும் இயக்குநர்..!!

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் அதில் சிறிய வேடம் என்றாலும் நடிக்கச் சம்மதிக்கும் நடிகர்களில் மாதவனும் ஒருவர். தமிழ், இந்தி என எந்த மொழிப்படங்களிலும் அவர் கடைபிடிக்கும் வழிமுறையாகக் சிறந்த கதையும் கதாபாத்திரங்களுமே இருக்கின்றன. தெலுங்கு திரையுலகில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்துள்ள மாதவன் படம் முழுக்க வரும்படியான கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.

நாக சைதன்யா நடிக்கும் சாவ்யாசச்சி படத்தில் மாதவன் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் இயக்குநர் சந்தூ மொண்டட்டி மாதவனின் ரசிகரும் கூட. முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கவுள்ள நிலையில் இயக்குநர் படக்குழுவின் சார்பாக மாதவனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதை சமூகவலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார்.

“17 ஆண்டுகளாக உங்கள் மேல் காதல் கொண்டிருக்கிறேன். நிகழ்ச்சி தொகுப்பாளராக தொடங்கி தேசிய அளவில் முக்கிய நடிகராக விளங்கும் நீங்கள் எங்களுக்குப் பெரிய ஊக்கசக்தியாக இருக்கிறீர்கள். உங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமை கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

“திரையில் உங்கள் நடிப்பைப் பார்ப்பதே மகிழ்ச்சியளிக்கும். படப்பிடிப்பு தளத்தில் நேரில் அதைப் பார்க்கும் போது படக்குழுவையும் உங்கள் ரசிகர்களாக மாற்றிவிடும். தெலுங்கு திரையுலகில் அது நடைபெற நீண்ட காலம் எடுத்துக்கொண்டுள்ளது. உங்களது இந்த முடிவால் நாங்கள் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளோம் இப்போதே படம் 50% வெற்றியடைந்துவிட்டது” என்று கூறியதுடன் படக்குழு சார்பாக மாதவனை தெலுங்கு திரையுலகிற்கு இயக்குநர் சந்தூ வரவேற்றுள்ளார். இவர் பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*