By April 20, 20180 CommentsReport

ரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.

ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட அதிபர்கள் போராட்டத்தால் கடந்த ஒரு மாதமாக புதுப்படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. இதையடுத்து ‘காலா’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் போராட்டம் முடிந்து, படங்களும் இன்று முதல் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில், ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதன்படி ‘காலா’ வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிழை பெற்றுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*