By April 20, 20180 CommentsReport

கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்..!!!

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய் 62’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வரலட்சுமி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ராதாரவி, பழ கருப்பையா, தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை தொடங்கியது. இங்கு முக்கியமான காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டது. பட அதிபர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தத்தால் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடந்தாமல் இருந்தனர். தற்போது ‘விஜய் 62’ படக்குழுவினர் அடுத்த கட்டமாக ஏப்ரல் 25ம் தேதி வெளிநாடு செல்ல இருக்கிறார்கள்.

வெளிநாட்டில் விஜய், கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட பாடல் காட்சியையும் முக்கியமான சண்டைக்காட்சியையும் படமாக்க இருக்கிறார்கள்.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*