By April 21, 20180 CommentsReport

நஸ்ரியா வீட்டிலிருந்து மற்றொரு நடிகர்..!!

நடிகை நஸ்ரியாவின் குடும்பத்திலிருந்து மற்றொரு நடிகர் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார்.

தமிழ், மலையாளத் திரையுலகில் இரண்டு ஆண்டுகளில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்திருந்தாலும் கவனம் ஈர்த்த நடிகையாகத் திகழ்ந்தவர் நஸ்ரியா.

ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ், நேரம் போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா மலையாள நடிகர் பகத் ஃபாசிலை மணம் முடித்த பின் படவாய்ப்புகளைத் தவிர்த்தார். அதன் பின் பகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தைத் தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக நஸ்ரியா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்புகள் வெளிவருமா என அவரது ரசிகர்கள் காத்திருக்க அவரது இளைய சகோதரர் நவீன் திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.

​‘கப்பி’ படத்தை இயக்கிய ஜான்பால் ஜார்ஜ் இயக்கும் படம் அம்பிலி. சௌபின் சாஹிர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நவீன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே பகத் ஃபாசிலின் சகோதரர் ஃபர்ஹான் பாசிலும் மலையாளத் திரையுலகில் நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*