By April 21, 20180 CommentsReport

ஸ்ருதிக்குப் படம் கிடைத்துவிட்டது..!!

ஸ்ருதி ஹாசன் சங்கமித்ரா படத்திலிருந்து விலகியபோது, இந்தப் படம் இல்லையென்றால் நூறு படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதோ ஒரு வருடமாகப் புதுப்படம் எதிலும் கமிட் ஆக முடியாத அளவுக்கு அவரை அந்தச் சம்பவம் பாதித்திருக்கிறது.

தற்போது வரை உருவாகியிருக்கும் படங்களுடன் ஒப்பிடும்போது சங்கமித்ரா, இந்தியாவின் அதிக பட்ஜெட் திரைப்படம் என தயாரிப்பு தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் கமிட் ஆனபோதே அதிர்ச்சியடைந்த ரசிகர்களுக்கும் திரையுலகத்துக்கும், அதிலிருந்து அவர் வெளியேறியபோது உறைந்துவிட்டார்கள் எனலாம்.

சங்கமித்ரா படக்குழுவினர் கேட்ட கால்ஷீட் தேதிகளை கொடுக்கமுடியவில்லை என, ஸ்ருதிஹாசன் விலகலுக்கு அப்போது காரணம் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பிறகு இத்தனை மாதங்களும் வேறெந்த படத்திலும் நடிக்காமல் அமைதிகாத்துவந்த ஸ்ருதிஹாசன், தற்போது பாலிவுட்டில் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கும் திரைப்படத்தில் வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை கலானி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நஸ்ருதீன் ஷா போன்ற பாலிவுட்டின் மிகத் திறமையான நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு ஸ்ருதி ஹாசனுக்குக் கிடைத்திருக்கிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*