By April 21, 20180 CommentsReport

பஞ்சாபில் சிங்கம்..!!

சூர்யா, அனுஷ்கா இணைந்து நடித்த சிங்கம் திரைப்படம் பஞ்சாப் மொழியில் ரீமேக் ஆக உள்ளது.

ஹரியின் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிங்கம். விறுவிறுப்பான திரைக்கதை படத்தை பெரும் வெற்றிப் படமாக்கியது. அந்த வெற்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தது.

இந்தப் படம் ’சிங்கம்’ என்ற பெயரிலேயே இந்தியில் ரீமேக்கானது. அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்க ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். கன்னடத்தில் ’கெம்பே கவ்டா’ என்ற பெயரில் இந்தப் படத்தை சுதீப் கதாநாயகனாக நடித்து இயக்கினார். அதைத் தொடர்ந்து பெங்காலியில் `ஷோட்ரூ’ என்ற பெயரில் ராஜ் சக்ரபோர்டி இயக்கினார். ஜீத் கதாநாயகனாக நடித்தார். மூன்று மொழிகளிலும் 2011ஆம் ஆண்டே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இந்தப் படம் பஞ்சாப் மொழியில் ரீமேக் ஆகவுள்ளது. பர்மீஸ் வர்மா கதாநாயகனாக நடிக்கும் இப்படம் `சிங்கம்’ என்கிற பெயரிலேயே உருவாகிறது. அடுத்த ஆண்டு திரைக்கு வரத் தயாராகிவருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*