By April 21, 20180 CommentsReport

கோலி, தீபிகா: சர்வதேச அங்கீகாரம்..!!

டைம் பத்திரிகையின் செல்வாக்குமிக்க நூறு நபர்களின் பட்டியல் நேற்று (ஏப்ரல் 19) வெளியாகியுள்ளது.

உலகளவில் செல்வாக்குமிக்க நூறு நபர்களின் பட்டியலை அமெரிக்காவில் வெளியாகும் டைம் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டுவருகிறது. 2018ஆம் ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ஒலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளைப் பெற்றுவருகிறது. மேலும் டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்துப் போட்டிகளிலும் கோலி தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்திவருகிறார்.

தீபிகா பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் சென்று அங்கும் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த பத்மாவத் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தாலும் விமர்சனரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.

ஒலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் ஆவார். இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஓலா நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது.


Post a Comment

CAPTCHA
Refresh

*