By April 21, 20180 CommentsReport

மீண்டும் கதாநாயகனாகும் சேரன்..!!

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரும் படம் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

திருட்டு விசிடிக்களைத் தடுப்பதற்காக இயக்குநர் சேரன் புதிய முயற்சிகளை மேற்கொண்டு சிடூஹெச் என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்தை இயக்கி, தயாரித்த சேரன் அதை சிடூஹெச் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டுபோய் சேர்க்க முயன்றார். ஆனால் இந்தத் திட்டத்துக்கு ரசிகர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து அவர் தயாரிப்பு மற்றும் இயக்கப் பணிகளில் ஈடுபடாமல் இருந்தார். இந்நிலையில் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஜெயம் ரவி, ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘மழை’ படத்தை இயக்கியவர் சாய் ராஜ்குமார். இவர் தற்போது இயக்கிவரும் படம் ‘ராஜாவுக்கு செக்’. படம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். வினோத் எஜமான்யா இசையமைக்கிறார். ஆனால் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகர்களின் பெயர்கள் வெளியாகவில்லை. ஒரு கையில் மது, இன்னொரு கையில் சிகரெட் என சேரன் போஸ்டரிலேயே வழக்கமாக தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களிலிருந்து வித்தியாசமாகத் தோன்றியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*