By April 21, 20180 CommentsReport

புதிய ‘காலா’ அறிமுகம்..!!

காலா’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒரு மாதம் தள்ளிப்போகிறது என்ற செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். ஜூன் 7ஆம் தேதி காலா திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலா திரைப்படத்தின் ஒரு ட்ரெய்லர் மட்டும் இதுவரை ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. பாடல்கள், புதிய ட்ரெய்லர், ஒவ்வொரு கேரக்டருக்குமான அறிமுகங்கள், படத்தின் புரமோஷன் என அனைத்தும் புத்தம்பொலிவுடன் முழு ரஜினி எனர்ஜியுடன் தயாரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

எந்திரன் 2.0 அறிமுக விழாவை பாலிவுட்டில் சிறப்பாகக் கொண்டாடியது போலவே, காலா திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸையும் மிகப்பெரிய அளவில் கொண்டுசெல்ல வேண்டுமென முடிவெடுத்து புதிய திட்டங்களுடன் வேலைகள் தொடங்கியிருக்கின்றன.


Post a Comment

CAPTCHA
Refresh

*