By April 21, 20180 CommentsReport

திரும்பி வந்த சதா..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த சதா இடையில் சில காலம் பட வாய்ப்புகளைத் தவிர்த்திருந்தார். டார்ச் லைட் திரைப்படம் மூலம் மீண்டும் களமிறங்க உள்ளார். தற்போது அவரது அடுத்த படம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.

தமிழன் திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜித் இயக்கும் டார்ச் லைட் திரைப்படத்தில் சதா பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார். பாலியல் தொழிலை மையமாக வைத்து 90களில் நடைபெறுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மஜித் கதையை விவரித்த உடனே சதா படத்தில் நடிப்பதாக சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சதாவுக்கு இது திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சதா மூன்று வருடங்களாக தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்ததால் படவாய்ப்புகளைத் தவிர்த்துவந்தார். 25 நாள்கள் மட்டுமே டார்ச் லைட் திரைப்படத்திற்காக கால்ஷீட் ஒதுக்கியிருந்த நிலையில் அதற்குள் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் சதா அடுத்த சில படங்களுக்காக கதை கேட்டுவருகிறார். அப்துல் மஜித்தும் தனது அடுத்த படக் கதையை சதாவிடம் விவரித்துள்ளார். டார்ச் லைட் திரைப்படத்தைத் தொடர்ந்து சதா மீண்டும் அவரது படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அந்தப் படத்தின் பணிகள் ஆரம்பக் கட்ட நிலையிலேயே உள்ளன.


Post a Comment

CAPTCHA
Refresh

*