By April 21, 20180 CommentsReport

விண்வெளிப் பயணத்துக்கு ரெடி..!!

வருண் தேஜ் நடிக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துக்கு வியாழன் அன்று (19 ஏப்ரல்) ஹைதராபாத்தில் பூஜை போடப்பட்டது.

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான காஸி அட்டாக் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சங்கல்ப் ரெட்டி. இவரது இயக்கத்தில் வருண் தேஜ் முதன்முறையாக நடிக்கவுள்ளார். அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்க, லாவண்யா திரிபாதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வருண் தேஜ், அதிதி இருவரும் விண்வெளி வீரர்களாக நடிக்கின்றனர். நிகழ்வில் படக்குழுவினர் உட்பட வருண் தேஜின் தந்தையும் நடிகருமான நாகேந்திர பாபுவும் கலந்துகொண்டார்.

படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாகவும் இந்த வருட இறுதியில் வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருண், சங்கல்ப் ரெட்டி தலைமையில் கஜகஸ்தானுக்கு ஜீரோ கிராவிட்டி நிலையில் பயிற்சி பெறச் செல்லவுள்ளதாக தயாரிப்பாளர் ஒய்.ராஜீவ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முதலில் பெரும்பாலான காட்சிகளை அமெரிக்காவில் படம்பிடிக்க படக்குழு திட்டமிட்டது. தற்போது ஜார்ஜியாவில் அரங்குகள் அமைத்து படமாக்கவுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுக்காக ஹாலிவுட்டிலிருந்து சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் பங்குபெறவுள்ளனர்.

பயிற்சி முடிந்து கஜகஸ்தானிலிருந்து வருவதற்குள் படத்தில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிடும். நான்கு விண்வெளி வீரர்கள் ஒரு பணியை மேற்கொள்வதற்காக விண்வெளிக்குச் செல்வது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

CAPTCHA
Refresh

*