By April 22, 20180 CommentsReport

யுவனுக்காக அஞ்சலியுடன் இணையும் விஜய் சேதுபதி..!!

விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடைய அடுத்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்கள்.

இந்த புதிய படத்தை விஜய் சேதுபதியை வைத்து ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ வெற்றிப் படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார். மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு தென்காசி மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது.

எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் (பி) லிட் பட நிறுவனங்கள் இணைந்து தற்போது ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

CAPTCHA
Refresh

*