By April 24, 20180 CommentsReport

இளம் நாயகிகளின் கூட்டணி..!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் வலம்வரும் இளம் நடிகைகளான நிவேதா தாமஸ், ஷாலினி பாண்டே இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர்.

2010ஆம் ஆண்டு வெளியான ‘இனிது இனிது’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே.வி.குகன். இயக்குநர் சரணின் சகோதரரான குகன் இந்தி, தமிழ், தெலுங்கு திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பல படங்களில் பணியாற்றியவர். ‘இனிது இனிது’ 2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹேப்பி டேஸ் படத்தின் ரீமேக். இந்தப் படத்திற்குப் பின் அவர் வேறு எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரான கல்யாண் ராம் கதாநாயகனாக நடிக்கிறார். நிவேதா தாமஸ், ஷாலினி பாண்டே இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

அர்ஜுன் ரெட்டி மூலம் வரவேற்பு பெற்ற ஷாலினி பாண்டே தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100% காதல் படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். பாபநாசம், ஜில்லா, நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்களில் நடித்த நிவேதா தாமஸ் கல்லூரி படிப்பை முடிப்பதற்காகப் பட வாய்ப்புகளைத் தவிர்த்துவந்தார். தற்போது மீண்டும் அவர் திரைத் துறையில் தீவிரம் காட்டிவருகிறார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*