By April 24, 20180 CommentsReport

தங்கமகனைப் பாராட்டிய சிவகார்த்தி..!!

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் சதிஷ்குமார் சிவலிங்கத்தை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில் சதிஷ்குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றார். அதில் இவர் மொத்தம் 317 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார். உலக அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இவர் தங்கம் வென்றது அனைவரின் பாராட்டையும் வாழ்த்துகளையும் பெற்றுத்தந்தது. இவருக்கு தமிழக அரசும் ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதையடுத்து, சதிஷ்குமார் சிவலிங்கத்தை சிவகார்த்திகேயன் தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து சதீஷ்குமார் சிவலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில், “அற்புதமான மனிதரைச் சந்தித்தேன். காமன்வெல்த் தங்கப் பதக்கத்துடன் அவரைச் சந்தித்தது உண்மையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. அவரது பேச்சும் வரவேற்பும் எனக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. நான் எப்பொழுதும் மதிக்கும் கொண்டாடும் நடிகர் அவர், அவரது கடின உழைப்புதான் அவரை வாழ்க்கையில் மேலே கொண்டுசென்றுள்ளது. உங்களின் அன்பான பரிசுக்கு மிகவும் நன்றி சகோதரா” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*