By April 24, 20180 CommentsReport

பிரேமம் ரீமேக்கில் அர்ஜுன் கபூர்..!!

பிரேமம் படத்தின் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் கபூர் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’. கதாநாயகனாக நடித்த நிவின் பாலியின் வாழ்வில் மூன்று கட்டங்களில் நிகழ்ந்த ஆழமான காதலையும் நட்புணர்வையும் சுவாரஸ்யமாகச் சொன்ன படம். இந்தப் படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். இந்த படம் மலையாள சினிமாவைத் தாண்டியும் இந்திய சினிமா அளவில் கவனம்பெற்றது.

இதன் காரணமாக ‘பிரேமம்’ தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் நிவின் பாலி கேரக்டரில் நாக சைதன்யா நடித்தார். சாய் பல்லவி கேரக்டரில் ஸ்ருதி ஹாசன் நடிக்க, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டின் இருவரும் தெலுங்கிலும் நடித்திருந்தனர்.

இதனையடுத்து இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அபிஷேக் கபூர் இயக்கவிருக்கும் இந்தப் படத்தில், நிவின் பாலி கேரக்டரில் அர்ஜுன் கபூர் நடிக்கவிருக்கிறார்.

இது குறித்து படத்தின் இயக்குநர் பாலிவுட் லைஃப் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “அர்ஜுன் பிரேமம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். தற்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி கேதார்நாத்தில் நடைபெற்றுவருகிறது. கதாநாயகிகளுக்கான தேர்வும் நடைபெற்று வருகின்றன. விரைவில் அறிவிப்பு வெளிவரும்” என்று கூறியுள்ளார்.


Post a Comment

CAPTCHA
Refresh

*