By April 25, 20180 CommentsReport

மடோனா இடத்தில் ஸ்ருதி..!!

தனுஷின் ப.பாண்டி படத்தின் கன்னட ரீமேக்கில் மடோனா செபஸ்டீன் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹரிஹரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழில் வரவேற்பைப் பெறும் பல படங்கள் கன்னட சினிமாவுலகில் ரீமேக்காகிவருவது தொடர்ந்து நடந்துவருகிறது. அந்த வரிசையில் தனுஷ் இயக்கத்தில் வெளியான ப.பாண்டி திரைப்படம் கன்னடத்தில் ரீமேக்காகி வருகிறது. தமிழில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், மடோனா செபஸ்டீன், ரேவதி ஆகியோருடன் இணைந்து தனுஷும் நடித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்தப் படத்தை கன்னடத்தில் இயக்குநர் குருதத்தா கனிகா ரீமேக் செய்துவருகிறார். சுதீப் தனுஷ் கேரக்டரில் நடிப்பதுடன் படத்தையும் தயாரிக்கிறார். ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் கன்னடத்தில் முன்னணி நடிகராக விளங்கும் அம்பரீஷ் நடிக்கிறார்.

ரேவதி நடித்த கேரக்டரில் முதலில் சுஹாசினி மணிரத்னம் நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் பெயரும் அடிப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரேவதி கேரக்டரில் சுஹாசினி நடிப்பது உறுதியாகியுள்ளது.

அதே சமயம் மடோனா கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த இடத்தை ஸ்ருதி ஹரிஹரன் தக்கவைத்துள்ளார். ‘அம்பி நிங் வயசாய்தோ’ என்ற பெயரில் உருவாகிவரும் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. சுதீப், ஸ்ருதி ஆகியோரின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டுவருகின்றன.


Post a Comment

CAPTCHA
Refresh

*